பாடல் 834
மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
- தலம்
- எட்டிகுடி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தன தத்தன தானா தானாதத்தன தத்தன தானா தானாதத்தன தத்தன தானா தானாதனதான
பாடல் வரிகள்
மைக்குழ லொத்தவை நீலோ மாலோஅக்கணி ணைக்கிணை சேலோ வேலோமற்றவர் சொற்றெளி பாலோ பாகோவடிதேனோ
வத்திர மெய்ச்சசி தானோ நாணாகுத்துமு லைக்கிள நீரோ மேரோவைப்பதி டைக்கிணை நூலோ மேலோவெனமாதர்
தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்லச்சைய றப்புணர் வாதே காதேசைச்சையெ னத்திரி நாயே னோயாதலையாதே
தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்தற்சமை யத்தக லாவே னாதாதத்தும யிற்பரி மீதே நீதான்வருவாயே
முக்கணர் மெச்சிய பாலா சீலாசித்தசன் மைத்துன வேளே தோளார்மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன்மருகோனே
முத்தமிழ் வித்வவி நோதா கீதாமற்றவ ரொப்பில ரூபா தீபாமுத்திகொ டுத்தடி யார்மேல் மாமால்முருகோனே
இக்குநி ரைத்தவி ராலு¡ர் சேலு¡ர்செய்ப்பழ நிப்பதி யூரா வர்ருர்மிக்கவி டைக்கழி §வ்ளுர் தர்ருர்வயலு¡ரா
எச்சுரு திக்குளு நீயே தாயேசுத்தவி றற்றிறல் வீரா தீராஎட்டிகு டிப்பதி வேலா மேலோர்பெருமாளே.
