பாடல் 794
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்
- தலம்
- திருவிடைக்கழி
- ராகம்
- ஸெளராஷ்டிரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - மிஸ்ரசாபு (3 1/2)தகிட-1 1/2, தகதிமி-2தனன தத்தனத் தனன தத்தனத்தனன தத்தனத்தனதான
பாடல் வரிகள்
பகரு முத்தமிழ்ப் பொருளு மெய்த்தவப்பயனு மெப்படிப்பலவாழ்வும்
பழைய முத்தியிற் பதமு நட்புறப்பரவு கற்பகத்தருவாழ்வும்
புகரில் புத்தியுற் றரசு பெற்றுறப்பொலியும் அற்புதப்பெருவாழ்வும்
புலன கற்றிடப் பலவி தத்தினைப்புகழ்ப லத்தினைத்தரவேணும்
தகரி லற்றகைத் தலம்வி டப்பிணைச்சரவ ணத்தினிற்பயில்வோனே
தனிவ னத்தினிற் புனம றத்தியைத்தழுவு பொற்புயத்திருமார்பா
சிகர வெற்பினைப் பகிரும் வித்தகத்திறல யிற்சுடர்க்குமரேசா
செழும லர்ப்பொழிற் குரவ முற்றபொற்றிருவி டைக்கழிப்பெருமாளே.
