பாடல் 791
குவளை பொருதிரு குழையை முடுகிய
- தலம்
- பாகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தனதன தனன தனதனதான தானனதனதான
பாடல் வரிகள்
குவளை பொருதிரு குழையை முடுகியகோல வேல்விழிமடவார்தங்
கொடிய ம்ருகமத புளக தனகிரிகூடி நாடொறுமயலாகித்
துவள வுருகிய சரச விதமதுசோர வாரிதியலையூடே
சுழலு மெனதுயிர் மவுன பரமசுகோம கோததிபடியாதோ
கவள கரதல கரட விகடகபோல பூதரமுகமான
கடவுள் கணபதி பிறகு வருமொருகார ணாகதிர்வடிவேலா
பவள மரகத கநக வயிரகபாட கோபுரஅரிதேரின்
பரியு மிடறிய புரிசை தழுவியபாகை மேவியபெருமாளே.
