பாடல் 790
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி - 2 களைதான தனந்தன தான தனந்தனதான தனந்தனதனதான
பாடல் வரிகள்
ஈளை சுரங்குளிர் வாத மெனும்பலநோய்கள் வளைந்தறஇளையாதே
ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடுகாடு பயின்றுயிரிழவாதே
மூளை யெலும்புகள் நாடி நரம்புகள்வேறு படுந்தழல்முழுகாதே
மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில்வாழ்வு பெறும்படிமொழிவாயே
வாளை நெருங்கிய வாவியி லுங்கயல்சேல்கள் மறிந்திடவலைபீறா
வாகை துதைந்தணி கேதகை மங்கிடமோதி வெகுண்டிளமதிதோயும்
பாளை நறுங்கமழ் பூக வனந்தலைசாடி நெடுங்கடல்கழிபாயும்
பாகை வளம்பதி மேவி வளஞ்செறிதோகை விரும்பியபெருமாளே.
