பாடல் 780
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடி
- ராகம்
- திலங்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - திஸ்ர்ருபகம் (5) 0/3தகதிமி-2, தகிட-1 1/2, தகிட-1 1/2தத்தன தான தான தத்தன தான தானதத்தன தான தானதனதான
பாடல் வரிகள்
எத்தனை கோடி கோடி விட்டுட லோடி யாடியெத்தனை கோடி போனதளவேதோ
இப்படி மோக போக மிப்படி யாகி யாகியிப்படி யாவ தேதுஇனிமேலோ
சித்திடில் சீசி சீசி குத்திர மாய மாயைசிக்கினி லாயு மாயுமடியேனைச்
சித்தினி லாட லோடு முத்தமிழ் வாண ரோதுசித்திர ஞான பாதமருள்வாயே
நித்தமு மோது வார்கள் சித்தமெ வீட தாகநிர்த்தம தாடு மாறுமுகவோனே
நிட்கள ரூபர் பாதி பச்சுரு வான மூணுநெட்டிலை சூல பாணியருள்பாலா
பைத்தலை நீடு மாயி ரத்தலை மீது பீறுபத்திர பாத நீலமயில்வீரா
பச்சிள பூக பாளை செய்க்கயல் தாவு §வ்ளுர்பற்றிய மூவர் தேவர்பெருமாளே.
