உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 775

பூமாதுர மேயணி மான்மறை

தலம்
சீகாழி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - திஸ்ர த்ருபுடை (7)தானாதன தானன தானனதானாதன தானன தானனதானாதன தானன தானனதந்ததான

பாடல் வரிகள்

பூமாதுர மேயணி மான்மறைவாய்நாலுடை யோன்மலி வானவர்கோமான்முநி வோர்முதல் யாருமியம்புவேதம்

பூராயம தாய்மொழி நூல்களும்ஆராய்வதி லாதட லாசுரர்போரால்மறை வாயுறு பீதியின்வந்துகூடி

நீமாறரு ளாயென ஈசனைபாமாலைக ளால்தொழு தேதிருநீறார்தரு மேனிய தேனியல்கொன்றையோடு

நீரேர்தரு சானவி மாமதிகாகோதர மாதுளை கூவிளைநேரோடம் விளாமுத லார்சடையெம்பிரானே

போமாறினி வேறெது வோதெனவேயாரரு ளாலவ ¡£தருபோர்வேலவ நீலக லாவியிவர்ந்துநீடு

பூலோகமொ டேயறு லோகமுநேரோர் நொடி யேவரு வோய்சுரசேனாபதி யாயவ னேயுனையன்பினோடுங்

காமாவறு சோம ஸமானனதாமாமண மார்தரு நீபசுதாமாவென வேதுதி யாதுழல்வஞ்சனேனைக்

காவாயடி நாளசு ரேசரையேசாடிய கூர்வடி வேலவகாரார்தரு காழியின் மேவியதம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →