உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 762

மூல முண்டகனு பூதி மந்திரப

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தான தந்ததன தான தந்ததனதான தந்ததன தான தந்ததனதான தந்ததன தான தந்ததனதந்ததான

பாடல் வரிகள்

மூல முண்டகனு பூதி மந்திரபராப ரஞ்சுடர்கள் மூணு மண்டலஅதார சந்திமுக மாறு மிந்த்ரதருவுந்தளாமேல்

மூது ரம்பலவர் பீட மந்தமுமிலாத பந்தவொளி யாயி ரங்கிரணமூணு மிந்துவொளிர் சோதி விண்படிகவிந்துநாதம்

ஓல மென்றுபல தாள சந்தமிடுசேவை கண்டமுதை வாரி யுண்டுலகிரேழு கண்டுவிளை யாடி யிந்துகதிரங்கிசூலம்

ஓடு மந்தகலி காலொ டுங்கநடுதூணில் தங்கவரி ஞான வண்கயிறுமீத ணைந்துசத கோடி சந்த்ரவொளிசந்தியாதோ

சூலி யந்தரிக பாலி சங்கரிபுராரி யம்பரிகு மாரி யெண்குணசுவாமி பங்கிசிவ காம சுந்தரியுகந்தசேயே

சூர சங்கரகு மார இந்திரசகாய அன்பருப கார சுந்தரகுகாஎ னுஞ்சுருதி யோல மொன்றநடனங்கொள்வேலா

சீல வெண்பொடியி டாத வெஞ்சமணர்மாள வெங்கழுவி லேறு மென்றுபொடிநீறி டுங்கமல பாணி சந்த்ரமுககந்தவேளே

தேவ ரம்பையமு தீண மங்கைதருமான ணைந்தபுய தீர சங்கரதியாகர் வந்துறைந லு¡ர மர்ந்துவளர்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →