உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 761

சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனனத் தத்தன தானன தானனதனனத் தத்தன தானன தானனதனனத் தத்தன தானன தானனதனதான

பாடல் வரிகள்

சரம்வெற் றிக்கய லாமெனும் வேல்விழிசிலைவட் டப்புரு வார்குழல் கார்முகில்தனமுத் துக்கிரி யாமெனு நூலிடைமடவார்கள்

சனுமெத் தப்பரி வாகிய மாமயலிடுமுத் தித்திகழ் மால்கொடு பாவையர்தகுதத் தக்கிட தோதகு தீதெனவிளையாடும்

விரகத் துர்க்குண வேசைய ராசையர்பணமெத் தப்பறி காரிகள் மாறிகள்விதமெத் தக்கொடு மேவிகள் பாவிகள்அதிபோக

மெலிவுற் றுக்குறி நாறிகள் பீறிகள்கலகத் தைச்செயு மோடிகள் பீடிகள்விருதிட் டுக்குடி கேடிகள் சேடிகள்உ றவாமோ

பொருவெற் றிக்கழை வார்சிலை யானுடலெரிபட் டுச்சரு காய்விழ வேநகைபுகுவித் தப்பிறை வாழ்சடை யானிடமொருமாது

புகழ்சத் திச்சிலு காவண மீதுறைசிவபத் திப்பர மேஸ்வரி யாள்திரிபுவனத் தைப்பரி வாய்முத லீனுமையருள்பாலா

திரையிற் பொற்கிரி யாடவும் வாசுகிபுனைவித் துத்தலை நாளமு தார்சுவைசிவபத் தர்க்கிது வாமென வேபகிரரிராமர்

திருவுற் றுப்பணி யாதிவ ராகர்தமகளைப் பொற்றன வாசையொ டாடியதிருமுட் டப்பதி வாழ்முரு காசுரர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →