பாடல் 751
திருமொழி யுரைபெற அரனுன துழிபணி
- தலம்
- விருத்தாசலம்
- ராகம்
- ஹரிகாம்போதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - ஆதி ( 2 களை)தனதன தனதன தனதன தனதனதனதன தனதனதனதான
பாடல் வரிகள்
திருமொழி யுரைபெற அரனுன துழிபணிசெயமுன மருளியகுளவோனே
திறலுயர் மதுரையி லமணரை யுயிர்கழுதெறிபட மறுகிடவிடுவோனே
ஒருவரு முனதருள் பரிவில ரவர்களினுறுபட ருறுமெனையருள்வாயோ
உ லகினி லனைவர்கள் புகழ்வுற அருணையில்ஒருநொடி தனில்வருமயில்வீரா
கருவரி யுறுபொரு கணைவிழி குறமகள்கணினெதிர் தருவெனமுனமானாய்
கருமுகில் பொருநிற அரிதிரு மருமககருணையில் மொழிதருமுதல்வோனே
முருகலர் தருவுறை யமரர்கள் சிறைவிடமுரணுறு மசுரனைமுனிவோனே
முடிபவர் வடிவறு சுசிகர முறைதமிழ்முதுகிரி வலம்வருபெருமாளே.
