பாடல் 750
குடத்தாமரை யாமென வேயிரு
- தலம்
- விருத்தாசலம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்தானன தானன தானனதனத்தானன தானன தானனதனத்தானன தானன தானனதனதான
பாடல் வரிகள்
குடத்தாமரை யாமென வேயிருதனத்தார்மதி வாணுத லாரிருள்குழற்காடின மாமுகில் போல்மதுகலைமோதக்
குலக்கார்மயி லாமென வேகயல்விழித்தார்கர மேல்கொடு மாமுலைகுடத்தியாழ்கிளி யாமென வேகுயில்குரலோசை
படித்தார்மயி லாமென வேநடைநெளித்தார்பல காமுகர் வார்கலைபழிப்பாரவ ராசையை மேல்கொடுவிலைமாதர்
படிக்கார்மின லாமென வேநகைபுரித்தார்பலர் வாயிதழ் சேர்பொருள்பறிப்பார்பழி காரிகள் நாரிகளுறவாமோ
அடைத்தார்கட லோர்வலி ராவணகுலத்தோடரி யோர்சர னார்சினமழித்தார்முகி லேய்நிற ராகவர்மருகோனே
அறுத்தாரய னார்தலை யேபுரமெரித்தாரதி லேபுல னாருயிரளித்தாருடல் பாதியி லேயுமைஅருள்பாலா
விடத்தாரசு ரார்பதி வேரறஅடித்தாய்கதிர் வேல்கொடு சேவகம்விளைத்தாய்குடி வாழம ரோர்சிறைமிடிதீர
விழித்தாமரை போலழ காகுறமகட்கானவ ணாஎன தாயுறைவிருத்தாசலம் வாழ்மயில் வாகனபெருமாளே.
