பாடல் 728
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படு
- தலம்
- திருவாமாத்தூர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தான தானன, தனதன தான தானனதனதன தான தானனதனதான
பாடல் வரிகள்
அடல்வடி வேல்கள் வாளிக ளவைவிட வோடல் நேர்படுமயில்விழி யாலு மாலெனுமதவேழத்
தளவிய கோடு போல்வினை யளவள வான கூர்முலையதின்முக மூடு மாடையினழகாலுந்
துடியிடை யாலும் வாலர்கள் துயர்வுற மாய மாயொருதுணிவுட னூடு மாதர்கள்துணையாகத்
தொழுதவர் பாத மோதியுன் வழிவழி யானெ னாவுயர்துலையலை மாறு போலுயிர்சுழல்வேனோ
அடவியி னூடு வேடர்க ளரிவையொ டாசை பேசியுமடிதொழு தாடு மாண்மையுமுடையோனே
அழகிய தோளி ராறுடை அறுமுக வேளெ னாவுனைஅறிவுட னோது மாதவர்பெருவாழ்வே
விடையெறு மீசர் நேசமு மிகநினை வார்கள் தீவினையுகநெடி தோட மேலணைபவர்மூதூர்
விரைசெறி தோகை மாதர்கள் விரகுட னாடு மாதையில்விறல்மயில் மீது மேவியபெருமாளே.
