உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 729

கண்க யற்பிணை மானொடுற வுண்டெ னக்கழை தோளானது

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதனதந்த தத்தன தானாதனதனதான

பாடல் வரிகள்

கண்க யற்பிணை மானொடுற வுண்டெ னக்கழை தோளானதுநன்க மைக்கின மாமமெனமுகையான

கஞ்ச மொத்தெழு கூர்மாமுலை குஞ்ச ரத்திரு கோடோடுறவிஞ்சு மைப்பொரு கார்கோதைகொடுயர்காலன்

பெண்ட னக்குள கோலாகல மின்றெ டுத்திளை யோராவிகள்மன்பி டிப்பது போல்நீள்வடிவுடைமாதர்

பின்பொ ழித்திடு மாமாயையி லன்பு வைத்தழி யாதேயுறுகிஞ்சி லத்தனை தாள்பேணிடஅருள்தாராய்

விண்ட னக்குற வானோனுடல் கண்ப டைத்தவன் வேதாவொடுவிண்டு வித்தகன் வீழ்தாளினர்விடையேறி

வெந்த னத்துமை யாள்மேவிய சந்த னப்புய மாதீசுரர்வெங்க யத்துரி யார்போர்வையர்மிகுவாழ்வே

தண்பு டைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் தாராதலமுங்கி ளைத்திட வானீள்திசையொடுதாவித்

தண்டரக் கர்கள் கோகோவென விண்டி டத்தட மாமீமிசைசண்ட விக்ரம வேலேவியபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →