உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 707

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தாளம் - அங்கதாளம் (7 1/2)தகதிமி தகதிமி-4, தகிட தகதிமி-3 1/2தானன தந்தன தந்த தந்தனதானன தந்தன தந்த தந்தனதானன தந்தன தந்த தந்தனதனதான

பாடல் வரிகள்

தோழமை கொண்டுச லஞ்செய் குண்டர்கள்ஓதிய நன்றிம றந்த குண்டர்கள்சூழ்விர தங்கள்க டிந்த குண்டர்கள்பெரியோரைத்

தூஷண நிந்தைப கர்ந்த குண்டர்கள்ஈவது கண்டுத கைந்த குண்டர்கள்சூளுற வென்பதொ ழிந்த குண்டர்கள்தொலையாமல்

வாழநி னைந்துவ ருந்து குண்டர்கள்நீதிய றங்கள்சி தைந்த குண்டர்கள்மானவ கந்தைமி குந்த குண்டர்கள்வலையாலே

மாயையில் நின்றுவ ருந்து குண்டர்கள்தேவர்கள் சொங்கள்க வர்ந்த குண்டர்கள்வாதைந மன்றன்வ ருந்தி டுங்குழிவிழுவாரே

ஏழு மரங்களும் வன்கு ரங்கெனும்வாலியு மம்பர மும்ப ரம்பரைராவண னுஞ்சது ரங்க லங்கையுமடைவேமுன்

ஈடழி யும்படி சந்த்ர னுஞ்சிவசூரிய னுஞ்சுர ரும்ப தம்பெறராம சரந்தொடு புங்க வன்திருமருகோனே

கோழி சிலம்பந லம்ப யின்றகலாப நடஞ்செய மஞ்சு தங்கியகோபுர மெங்கும்வி ளங்கு மங்கலவயலு¡ரா

கோமள அண்டர்கள் தொண்டர் மண்டலர்வேல னெனும்பெய ரன்பு டன்புகழ்கோடை யெனும்பதி வந்த இந்திரர்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →