பாடல் 708
தோடப் பாமற் றோய்தப் பாணிச்
- தலம்
- கோடைநகர்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானத் தானத் தானத் தானத்தானத் தானத்தனதான
பாடல் வரிகள்
தோடப் பாமற் றோய்தப் பாணிச்சூழ்துற் றார்துற்றழுவாருந்
தூரப் போகக் கோரப் பாரச்சூலப் பாசச்சமனாரும்
பாடைக் கூடத் தீயிற் றேறிப்பாழ்பட் டேபட்டழியாதே
பாசத் தேனைத் தேசுற் றார்பொற்பாதத் தேவைத்தருள்வாயே
ஆடற் சூர்கெட் டோடத் தோயத்தாரச் சீறிப்பொரும்வேலா
ஆனைச் சேனைக் கானிற் றேனுக்காரத் தாரைத்தரும்வீரா
கூடற் பாடிக் கோவைப் பாவைக்கூடப் பாடித்திரிவோனே
கோலச் சாலிச் சோலைச் சீலக்கோடைத் தேவப்பெருமாளே.
