பாடல் 70
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகி
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- கோதார கெளளை
- தாளம்
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தந்த தான தானதான தந்த தான தானதான தந்த தான தானதனதான
பாடல் வரிகள்
நாலு மைந்து வாசல் கீறு தூறு டம்பு கால்கை யாகிநாரி யென்பி லாகு மாகமதனுடே
நாத மொன்ற ஆதி வாயில் நாட கங்க ளான ஆடிநாட றிந்தி டாம லேகவளராமுன்
நூல நந்த கோடி தேடி மால்மி குந்து பாரு ளோரைநூறு செஞ்சொல் கூறி மாறிவிளைதீமை
நோய்க லந்த வாழ்வு றாமல் நீக லந்து ளாகு ஞானநூல டங்க வோத வாழ்வுதருவாயே
காலன் வந்து பால னாவி காய வென்று பாசம் வீசுகாலம் வந்து வோல மோலமெனுமாதி
காம னைந்து பாண மோடு வேமி னென்று காணு மோனர்காள கண்ட ரோடு வேதமொழிவோனே
ஆல மொன்று வேலை யாகி யானை யஞ்சல் தீரு மூலஆழி யங்கை ஆயன் மாயன்மருகோனே
ஆர ணங்கள் தாளை நாட வார ணங்கை மேவு மாதியான செந்தில் வாழ்வ தானபெருமாளே.
