உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 69

தோலொடு மூடிய கூரையை நம்பிப்

தாளம்
ஆதி (எடுப்பு 3/4 இடம்)

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத்தானன தானன தானன தந்தத்தனதான

பாடல் வரிகள்

தோலொடு மூடிய கூரையை நம்பிப்பாவையர் தோதக லீலைநி ரம்பிச்சூழ்பொருள் தேடிட வோடிவ ருந்திப்புதிதான

தூதொடு நான்மணி மாலைப்ர பந்தக்கோவையு லாமடல் கூறிய ழுந்தித்தோமுறு காளையர் வாசல்தொ றும்புக்கலமாருங்

காலனை வீணனை நீதிகெ டும்பொய்க்கோளனை மானமி லாவழி நெஞ்சக்காதக லோபவ்ரு தாவனை நிந்தைப்புலையேனைக்

காரண காரிய லோகப்ர பஞ்சச்சோகமெ லாமற வாழ்வுற நம்பிற்காசறு வாரிமெய்ஞ் ஞான தவஞ்சற்றருளாதோ

பாலன மீதும னான்முக செம்பொற்பாலனை மோதப ராதன பண்டப்பாரிய மாருதி தோள்மிசை கொண்டுற்றமராடிப்

பாவியி ராவண னார்தலை சிந்திச்சீரிய வீடணர் வாழ்வுற மன்றற்பாவையர் தோள்புணர் மாதுலர் சிந்தைக்கினியோனே

சீலமு லாவிய நாரதர் வந்துற்றீதவள் வாழ்புன மாமென முந்தித்தேமொழி பாளித கோமள இன்பக்கிரிதோய்வாய்

சேலொடு வாளைவ ரால்கள் கிளம்பித்தாறுகொள் பூகம ளாவிய இன்பச்சீரலை வாய்நகர் மேவிய கந்தப்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →