பாடல் 693
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்ற
- தலம்
- திருமயிலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தத்த தனதனன தான தத்ததனதனன தான தத்ததனதான
பாடல் வரிகள்
களபமணி யார முற்ற வனசமுலை மீது கொற்றகலகமத வேள்தொ டுத்தகணையாலுங்
கனிமொழிமி னார்கள் முற்று மிசைவசைகள் பேச வுற்றகனலெனவு லாவு வட்டமதியாலும்
வளமையணி நீடு புஷ்ப சயனஅணை மீது ருக்கிவனிதை மடல் நாடி நித்தநலியாதே
வரியளியு லாவு துற்ற இருபுயம ளாவி வெற்றிமலரணையில் நீய ணைக்கவரவேணும்
துளபமணி மார்ப சக்ர தரனரிமு ராரி சர்ப்பதுயிலதர னாத ரித்தமருகோனே
சுருதிமறை வேள்வி மிக்க மயிலைநகர் மேவு முக்ரதுரகதக லாப பச்சைமயில்வீரா
அளகைவணி கோர்கு லத்தில் வனிதையுயிர் மீள ழைப்பஅருள்பரவு பாடல் சொற்றகுமரேசா
அருவரையை நீறெ ழுப்பி நிருதர்தமை வேர றுத்துஅமரர்பதி வாழ வைத்தபெருமாளே.
