பாடல் 694
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்
- தலம்
- திருமயிலை
- ராகம்
- கல்யாண வஸந்தம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்கதாளம் (5 1/2)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதகிட-2 1/2தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
கடிய வேக மாறாத விரத சூத ராபாதர்கலக மேசெய் பாழ்மூடர்வினைவேடர்
கபட வீன ராகாத இயல்பு நாடி யேநீடுகனவி கார மேபேசிநெறி பேணாக்
கொடிய னேது மோராது விரக சால §ம்முடுகுடிலின் மேவி யேநாளுமடியாதே
குலவு தோகை மீதாறு முகமும் வேலு மீராறுகுவளை வாகும் நேர்காணவருவாயே
படியி னோடு மாமேரு அதிர வீசி யேசேடபணமு மாட வேநீடுவரைசாடிப்
பரவை யாழி நீர்மோத நிருதர் மாள வானாடுபதிய தாக வேலேவுமயில்வீரா
வடிவு லாவி யாகாச மிளிர்ப லாவி னீள்சோலைவனச வாவி பூவோடைவயலோடே
மணிசெய் மாட மாமேடை சிகர மோடு வாகானமயிலை மேவி வாழ்தேவர்பெருமாளே.
