பாடல் 68
தொந்தி சரிய மயிரே வெளிறநிரை
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- தோடி/அடாணா
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாளம் - அங்தாளம் (7 1/2) (ஆதி தாளத்திலும் பாடுவதுண்டு)தகிட-1 1/2, தகிட-1 1/2, தகதா-2,தகிடதக-2 1/2தந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதனதந்த தனன தனனா தனனதனதனதான
பாடல் வரிகள்
தொந்தி சரிய மயிரே வெளிறநிரைதந்த மசைய முதுகே வளையஇதழ்தொங்க வொருகை தடிமேல் வரமகளிர்நகையாடி
தொண்டு கிழவ னிவனா ரெனஇருமல்கிண்கி ணெனமு னுரையே குழறவிழிதுஞ்சு குருடு படவே செவிடுபடுசெவியாகி
வந்த பிணியு மதிலே மிடையுமொருபண்டி தனுமெ யுறுவே தனையுமிளமைந்த ருடைமை கடனே தெனமுடுகதுயர்மேவி
மங்கை யழுது விழவே யமபடர்கள்நின்று சருவ மலமே யொழுகவுயிர்மங்கு பொழுது கடிதே மயிலின்மிசைவரவேணும்
எந்தை வருக ரகுநா யகவருகமைந்த வருக மகனே யினிவருகஎன்கண் வருக எனதா ருயிர்வருகஅபிராம
இங்கு வருக அரசே வருகமுலையுண்க வருக மலர்சூ டிடவருகஎன்று பரிவி னொடுகோ சலைபுகலவருமாயன்
சிந்தை மகிழு மருகா குறவரிளவஞ்சி மருவு மழகா அமரர்சிறைசிந்த அசுரர் கிளைவே ரொடுமடியஅடுதீரா
திங்க ளரவு நதிசூ டியபரமர்தந்த குமர அலையே கரைபொருதசெந்தி னகரி லினிதே மருவிவளர்பெருமாளே.
