பாடல் 679
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பை
- தலம்
- பாக்கம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாத்தத் தனந்த தந்த தாத்தத் தனந்த தந்ததாத்தத் தனந்த தந்ததனதான
பாடல் வரிகள்
பாற்றுக் கணங்கள் தின்று தேக்கிட் டிடுங்கு ரம்பைநோக்கிச் சுமந்து கொண்டுபதிதோறும்
பார்த்துத் திரிந்து ழன்று ஆக்கத் தையுந்தெ ரிந்துஏக்கற்று நின்று நின்றுதளராதே
வேற்றுப் புலன்க ளைந்து மோட்டிப் புகழ்ந்து கொண்டுவீட்டிற் புகுந்தி ருந்துமகிழ்வேனோ
மாற்றற்ற பொன்து லங்கு வாட்சக்கி ரந்தெ ரிந்துவாய்ப்புற்ற மைந்த சங்குதடிசாப
மாற்பொற்க லந்து லங்க நாட்டச்சு தன்ப ணிந்துவார்க்கைத்த லங்க ளென்றுதிரைமோதும்
பாற்சொற்ற டம்பு குந்து வேற்கட்சி னம்பொ ருந்துபாய்க்குட் டுயின்ற வன்றன்மருகோனே
பாக்குக் கரும்பை கெண்டை தாக்கித் தடம் படிந்தபாக்கத் தமர்ந்தி ருந்தபெருமாளே.
