பாடல் 678
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழி
- தலம்
- பாக்கம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாத்தத்த தானதன தாத்தத்த தானதனதாத்தத்த தானதனதனதான
பாடல் வரிகள்
கார்க்கொத்த மேனிகடல் போற்சுற்ற மானவழிகாய்த்தொட்டொ ணாதவுருஒருகோடி
காக்கைக்கு நாய்கழுகு பேய்க்கக்க மானவுடல்காட்டத்தி னீளெரியிலுறவானிற்
கூர்ப்பித்த சூலனத னாற்குத்தி யாவிகொடுபோத்துக்க மானகுறையுடையேனைக்
கூப்பிட்டு சாவருளி வாக்கிட்டு நாமமொழிகோக்கைக்கு நூலறிவுதருவாயே
போர்க்கெய்த்தி டாமறலி போற்குத்தி மேவசுரர்போய்த்திக்கெ லாமடியவடிவேலாற்
பூச்சித்தர் தேவர்மழை போற்றுர்க்க வேபொருதுபோற்றிச்செய் வார்சிறையைவிடுவோனே
பார்க்கொற்ற நீறுபுனை வார்க்கொக்க ஞானபரனாய்ப்பத்தி கூர்மொழிகள்பகர்வாழ்வே
பாக்கொத்தி னாலியலர் நோக்கைக்கு வேல்கொடுயர்பாக்கத்தில் மேவவலபெருமாளே.
