உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 669

குலையமயி ரோதி குவியவிழி வீறு

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதனன தான தனதனன தானதனதனன தானதனதானா

பாடல் வரிகள்

குலையமயி ரோதி குவியவிழி வீறுகுருகினிசை பாடிமுகமீதே

குறுவியர்வு லாவ அமுதினினி தானகுதலையுமொ ராறுபடவேதான்

பலவிதவி நோத முடனுபய பாதபரிபுரமு மாடஅணைமீதே

பரிவுதரு மாசை விடமனமொ வாதபதகனையு மாளநினைவாயே

சிலைமலைய தான பரமர்தரு பாலசிகிபரிய தானகுமரேசா

திருமதுரை மேவு மமணர்குல மானதிருடர்கழு வேறவருவோனே

கலின்வடிவ மான அகலிகைபெ ணானகமலபத மாயன்மருகோனே

கழனிநெடு வாளை கமுகொடிய மோதுகரபுரியில் வீறுபெருமாளே.

எல்லாப் பாடல்களும் →