பாடல் 668
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்
- தலம்
- விரிஞ்சிபுரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனத் தனதனத் தனதனத் தனதனத்தனதனத் தனதனத் தனதனத் தனதனத்தனதனத் தனதனத் தனதனத் தனதனத்தனதான
பாடல் வரிகள்
ஒருவரைச் சிறுமனைச் சயனமெத் தையினில்வைத்தொருவரைத் தமதலைக் கடையினிற் சுழலவிட்டொருவரைப் பரபரப் பொடுதெருத் திரியவிட்டதனாலே
ஒருவருக் கொருவர்சக் களமையிற் சருவவிட்டுருவுபத் திரமெடுத் தறையின்மற் புரியவிட்டுயிர்பிழைப் பதுகருத் தளவிலுச் சிதமெனச்செயுமானார்
தருமயற் ப்ரமைதனிற் றவநெறிக் கயலெனச்சரியையிற் கிரியையிற் றவமுமற் றெனதுகைத்தனமவத் தினிலிறைத் தெவருமுற் றிகழ்வுறத்திரிவேனைச்
சகலதுக் கமுமறச் சகலசற் குணம்வரத்தரணியிற் புகழ்பெறத் தகைமைபெற் றுனதுபொற்சரணமெப் பொழுதுநட் பொடுநினைத் திடஅருட்டருவாயே
குருமொழித் தவமுடைப் புலவரைச் சிறையில்வைத்தறவுமுக் கிரம்விளைத் திடுமரக் கரைமுழுக்கொடியதுர்க் குணஅவத் தரைமுதற் றுரிசறுத்திடும்வேலா
குயில்மொழிக் கயல்விழித் துகிரிதழ்ச் சிலைநுதற்சசிமுகத் திளநகைக் கனகுழற் றனகிரிக்கொடியிடைப் பிடிநடைக் குறமகட் டிருவினைப்புணர்வோனே
கருதுசட் சமயிகட் கமைவுறக் கிறியுடைப்பறிதலைச் சமணரைக் குலமுதற் பொடிபடக்கலகமிட் டுடலுயிர்க் கழுவினுச் சியினில்வைத்திடுவோனே
கமுகினிற் குலையறக் கதலியிற் கனியுகக்கழையின்முத் தமுதிரக் கயல்குதித் துலவுநற்கனவயற் றிகழ்திருக் கரபுரத் தறுமுகப்பெருமாளே.
