பாடல் 646
மாதர்வச மாயுற் ...... றுழல்வாரும்
- தலம்
- கதிர்காமம்
- ராகம்
- குந்தல வராலி
- தாளம்
- அங்கதாளம் (7)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதகிட-2 1/2, தகிட-1 1/2, தகதிமிதக-3தானதன தானத்தனதான
பாடல் வரிகள்
மாதர்வச மாயுற்றுழல்வாரும்
மாதவமெ ணாமற்றிரிவாரும்
தீதகல வோதிப்பணியாரும்
தீநரக மீதிற்றிகழ்வாரே
நாதவொளி யேநற்குணசீலா
நாரியிரு வோரைப்புணர்வேலா
சோதிசிவ ஞானக்குமரேசா
தோமில் கதிர்காமப்பெருமாளே.
