பாடல் 645
மருவறா வெற்றி மலர்தொடா விற்கை
- தலம்
- கதிர்காமம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனா தத்த தனதனா தத்ததனதனா தத்ததனதான
பாடல் வரிகள்
மருவறா வெற்றி மலர்தொடா விற்கைவலிசெயா நிற்குமதனாலும்
மதில்கள்தா வுற்ற கலைபடா வட்டமதிசுடா நிற்குமதனாலும்
இருகணால் முத்த முதிரயா மத்தினிரவினால் நித்தமெலியாதே
இடருறா மெத்த மயல்கொளா நிற்குமிவளைவாழ் விக்கவரவேணும்
கரிகள்சேர் வெற்பி லரியவே டிச்சிகலவிகூர் சித்ரமணிமார்பா
கனகமா ணிக்க வடிவனே மிக்ககதிரகா மத்திலுறைவோனே
முருகனே பத்த ரருகனே முத்திமுதல்வனே பச்சைமயில்வீரா
முடுகிமே லிட்ட கொடியசூர் கெட்டுமுறியவேல் தொட்டபெருமாளே.
