பாடல் 644
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்ப
- தலம்
- கதிர்காமம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானதன தத்தத்த தானதன தத்தத்ததானதன தத்தத்ததனதான
பாடல் வரிகள்
பாரவித முத்தப்ப டீரபுள கப்பொற்பயோதர நெருக்குற்றஇடையாலே
பாகளவு தித்தித்த கீதமொழி யிற்புட்பபாணவிழி யிற்பொத்திவிடுமாதர்
காரணி குழற்கற்றை மேல்மகர மொப்பித்தகாதில்முக வட்டத்திலதிமோக
காமுக னகப்பட்ட வாசையைம றப்பித்தகால்களைம றக்கைக்கும்வருமோதான்
தேரிரவி யுட்கிப்பு காமுதுபு ரத்திற்றெசாசிரனை மர்த்தித்தஅரிமாயன்
சீர்மருக அத்யுக்ர யானைபடும் ரத்நத்ரிகோணசயி லத்துக்ரகதிர்காம
வீரபுன வெற்பிற்க லாபியெயி னச்சிக்குமேகலை யிடைக்கொத்தினிருதாளின்
வேரிமழை யிற்பச்சை வேயிலரு ணக்கற்றைவேல்களில கப்பட்டபெருமாளே.
