பாடல் 636
திருமக ளுலாவு மிருபுய முராரி
- தலம்
- கதிர்காமம்
- ராகம்
- குந்தல வராலி
- தாளம்
- ஆதி
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தனதனன தானதனதனன தானதனதான
பாடல் வரிகள்
திருமக ளுலாவு மிருபுய முராரிதிருமருக நாமப்பெருமாள்காண்
செகதலமும் வானு மிகுதிபெறு பாடல்தெரிதரு குமாரப்பெருமாள்காண்
மருவுமடி யார்கள் மனதில்விளை யாடுமரகதம யூரப்பெருமாள்காண்
மணிதரளம் வீசி யணியருவி சூழமருவுகதிர் காமப்பெருமாள்காண்
அருவரைகள் நீறு படஅசுரர் மாளஅமர்பொருத வீரப்பெருமாள்காண்
அரவுபிறை வாரி விரவுசடை வேணிஅமலர்குரு நாதப்பெருமாள்காண்
இருவினையி லாத தருவினைவி டாதஇமையவர்கு லேசப்பெருமாள்காண்
இலகுசிலை வேடர் கொடியினதி பாரஇருதனவி நோதப்பெருமாளே.
