பாடல் 637
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளி
- தலம்
- கதிர்காமம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனன தான தானான தனன தான தானானதனன தான தானானதனதான
பாடல் வரிகள்
அலகின் மாறு மாறாத கலதி பூத வேதாளிஅடைவில் ஞாளி கோமாளிஅறமீயா
அழிவு கோளி நாணாது புழுகு பூசி வாழ்மாதர்அருளி லாத தோடாயமருளாகிப்
பலக லாக ராமேரு மலைக ராச லாவீசுபருவ மேக மேதாருவெனயாதும்
பரிவு றாத மாபாதர் வரிசை பாடி யோயாதபரிசில் தேடி மாயாதபடிபாராய்
இலகு வேலை நீழ்வாடை யெரிகொள் வேலை மாசூரிலெறியும் வேலை மாறாததிறல்வீரா
இமய மாது பாகீர திநதி பால காசாரலிறைவி கான மால்வேடர்சுதைபாகா
கலக வாரி போல்மோதி வடவை யாறு சூழ்சீதகதிர காம மூதூரிலிளையோனே
கனக நாடு வீடாய கடவுள் யானை வாழ்வானகருணை மேரு வேதேவர்பெருமாளே.
