பாடல் 630
மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடி
- தலம்
- பொதியமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்த தத்த தான தான தத்த தத்த தான தானதத்த தத்த தான தானதனதான
பாடல் வரிகள்
மைக்க ணிக்கன் வாளி போல வுட்க ளத்தை மாறி நாடிமட்டு முற்ற கோதை போதமுடிசூடி
மத்த கத்தி னீடு கோடு வைத்த தொத்தின் மார்பி னுடுவட்ட மிட்ட வாரு லாவுமுலைமீதே
இக்கு வைக்கு மாடை வீழ வெட்கி யக்க மான பேரையெத்தி முத்த மாடும் வாயினிசைபேசி
எட்டு துட்ட மாதர் பாய லிச்சை யுற்றெ னாக மாவியெய்த்து நித்த மான வீனமுறலாமோ
துர்க்கை பக்க சூல காளி செக்கை புக்க தாள வோசைதொக்க திக்க தோத தீதவெனவோதச்
சுற்றி வெற்றி யோடு தாள்கள் சுத்த நிர்த்த மாடு மாதிசொற்கு நிற்கு மாறு தாரமொழிவோனே
திக்கு மிக்க வானி னுடு புக்க விக்க மூடு சூரர்திக்க முட்டி யாடு தீரவடிவேலா
செச்சை பிச்சி மாலை மார்ப விச்சை கொச்சை மாதி னோடுசெப்பு வெற்பில் சேய தானபெருமாளே.
