பாடல் 631
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழி
- தலம்
- பொதியமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனத்த தானன தனத்த தானனதனத்த தானன தனத்த தானனதனத்த தானன தனத்த தானனதந்ததான
பாடல் வரிகள்
வெடித்த வார்குழல் விரித்து மேல்விழிவிழித்து மேகலை பதித்து வார்தொடுமிகுத்த மாமுலை யசைத்து நூலின்மருங்கினாடை
மினுக்கி யோலைகள் பிலுக்கி யேவளைதுலக்கி யேவிள நகைத்து கீழ்விழிமிரட்டி யாரையு மழைத்து மால்கொடுதந்தவாய்நீர்
குடித்து நாயென முடக்கு மேல்பிணியடுத்த பாதிகள் படுத்த தாய்தமர்குலத்தர் யாவரு நகைக்க வேயுடல்மங்குவேனைக்
குறித்து நீயரு கழைத்து மாதவர்கணத்தின் மேவென அளித்து வேல்மயில்கொடுத்து வேதமு மொருத்த னாமெனசிந்தைகூராய்
உடுட்டு டூடுடு டுடுட்டொ டோ வெனதிகுத்த தீதிகு திகுர்த்த தாவெனஉடுக்கை பேரிகை தவிற்கு ழாமுமிரங்குபோரில்
உலுத்த நீசர்கள் பதைப்ப மாகரிதுடிப்ப நீள்கட லெரித்து சூர்மலையுடைத்து நீதிகள் பரப்பி யேயவரும்பராரை
அடைத்த மாசிறை விடுத்து வானுலகளிக்கு மாயிர திருக்க ணானரசளித்து நாளுமெ னுளத்தி லேமகிழுங்குமாரா
அளித்த தாதையு மிகுத்த மாமனும்அனைத்து ளோர்களு மதிக்க வேமகிழ்அகத்ய மாமுநி பொருப்பின் மேவியதம்பிரானே.
