பாடல் 6
முத்தைத்தரு பத்தித் திருநகை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதத்தத்தன தத்தத் தனதனதனதான
பாடல் வரிகள்
முத்தைத்தரு பத்தித் திருநகைஅத்திக்கிறை சத்திச் சரவணமுத்திக்கொரு வித்துக் குருபரஎனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்முற்பட்டது கற்பித் திருவரும்முப்பத்துமு வர்க்கத் தமரரும்அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடுஒற்றைக்கிரி மத்தைப் பொருதொருபட்டப்பகல் வட்டத் திகிரியில்இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவியபச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்பட்சத்தொடு ரட்சித் தருள்வதும்ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுரநிர்த்தப்பதம் வைத்துப் பயிரவிதிக்கொட்கந டிக்கக் கழுகொடுகழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகுசித்ரப்பவு ரிக்குத் த்ரிகடகஎனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசைகுக்குக்குகு குக்குக் குகுகுகுகுத்திப்புதை புக்குப் பிடியெனமுதுகூகை
கோட்புற்றெழ நட்பற் றவுணரைவெட்டிப்பலி யிட்டுக் குலகிரிகுத்துப்பட ஒத்துப் பொரவலபெருமாளே.
