பாடல் 599
தாமா தாமா லாபா லோகா
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தானா தானா தானா தானாதானா தானத்தனதான
பாடல் வரிகள்
தாமா தாமா லாபா லோகாதாரா தாரத்தரணீசா
தானா சாரோ பாவா பாவோநாசா பாசத்தபராத
யாமா யாமா தேசா ரூடாயாரா யாபத்தெனதாவி
யாமா காவாய் தீயே னீர்வாயாதே யீமத்துகலாமோ
காமா காமா தீனா நீணாகாவாய் காளக்கிரியாய்கங்
காளா லீலா பாலா நீபாகாமா மோதக்கனமானின்
தேமார் தேமா காமீ பாகீதேசா தேசத்தவரோதுஞ்
சேயே வேளே பூவே கோவேதேவே தேவப்பெருமாளே.
