பாடல் 597
ஆல காலப டப்பைம டப்பியர்
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதான தானன தத்தன தத்தனதனதான
பாடல் வரிகள்
ஆல காலப டப்பைம டப்பியர்ஈர வாளற வெற்றும்வி ழிச்சியர்யாவ ராயினு நத்திய ழைப்பவர்தெருவூடே
ஆடி யாடிந டப்பதொர் பிச்சியர்பேசி யாசை கொடுத்தும ருட்டிகள்ஆசை வீசிய ணைக்குமு லைச்சியர்பல்ருடே
மாலை யோதிவி ரித்துமு டிப்பவர்சேலை தாழநெ கிழ்த்தரை சுற்றிகள்வாசம் வீசும ணத்தில்மி னுக்கிகள்உறவாலே
மாயை யூடுவி ழுத்திய ழுத்திகள்காம போகவி னைக்குளு னைப்பணிவாழ்வி லாமல்ம லச்சன னத்தினிலுழல்வேனோ
மேலை வானொரு ரைத்தச ரற்கொருபால னாகியு தித்தொர்மு நிக்கொருவேள்வி காவல்ந டத்திய கற்குருஅடியாலே
மேவி யேமிதி லைச்சிலை செற்றுமின்மாது தோள்தழு விப்பதி புக்கிடவேறு தாயட விக்குள் விடுத்தபினவனோடே
ஞால மாதொடு புக்கவ னத்தினில்வாழும் வாலிப டக்கணை தொட்டவனாடி ராவண னைச்செகு வித்தவன்மருகோனே
ஞான தேசிக சற்குரு உத்தமவேல வாநெரு வைப்பதி வித்தகநாக மாமலை சொற்பெற நிற்பதொர்பெருமாளே.
