பாடல் 593
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்
- தலம்
- திருச்செங்கோடு
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தந்த தத்தத் தந்த தத்தத்தந்த தத்தத் தந்த தத்தத்தந்த தத்தத் தந்த தத்தத்தனதான
பாடல் வரிகள்
பொன்ற லைப்பொய்க் கும்பி றப்பைத்தும்ப றுத்திட் டின்று நிற்கப்புந்தி யிற்சற் றுங்கு றிக்கைக்கறியாமே
பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்சிங்கி யொத்தச் சங்க டத்துப்புண்ப டைத்துக் கஞ்ச மைக்கட்கொடியார்மேல்
துன்று மிச்சைப் பண்ட னுக்குப்பண்ப ளித்துச் சம்ப்ர மித்துத்தும்பி பட்சிக் கும்ப்ர சச்செய்ப்பதிமீதே
தொண்டு பட்டுத் தெண்ட னிட்டுக்கண்டு பற்றத் தண்டை வர்க்கத்துங்க ரத்தப் பங்க யத்தைத்தருவாயே
குன்றெ டுத்துப் பந்த டித்துக்கண்சி வத்துச் சங்க ரித்துக்கொண்ட லொத்திட் டிந்த்ர னுக்கிச்சுரலோகா
கொம்பு குத்திச் சம்ப ழுத்தித்திண்ட லத்திற் றண்டு வெற்பைக்கொண்ட முக்கிச் சண்டை யிட்டுப்பொரும்வேழம்
சென்று ரித்துச் சுந்த ரிக்கச்சந்த விர்த்துக் கண்சு கித்துச்சிந்தை யுட்பற் றின்றி நித்தக்களிகூருஞ்
செண்ப கத்துச் சம்பு வுக்குத்தொம்ப தத்துப் பண்பு ரைத்துச்செங்கு வட்டிற் றங்கு சொக்கப்பெருமாளே.
