உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 592

நீலமஞ் சானகுழல் மாலைவண் டோ டுகதி

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தானனந் தானதன தானனந் தானதன------ 6 முறை -----தந்ததான

பாடல் வரிகள்

நீலமஞ் சானகுழல் மாலைவண் டோ டுகதிநீடுபந் தாடுவிழி யார்பளிங் கானநகை

நீலபொன் சாபநுத லாசையின் தோடசையுநீள்முகந் தாமரையி னார்மொழிந் தாரமொழி

நேர்சுகம் போலமு கானகந் தாரர்புயநேர்சுணங் காவிகிளை யேர்சிறந் தார்மலையிரண்டுபோல

நீளிபங் கோடிளநிர் தேனிருந் தாரமுலைநீடலங் காரசர மோடடைந் தார்மருவி

நீள்மணஞ் சாறுபொழி யாவளம் போதிவையினீலவண் டேவியநல் காமனங் காரநிறை

நேசசந் தானஅல்குல் காமபண் டாரமுதைநேருசம் போகரிடை நூலொளிர்ந் தாசையுயிர்சம்பையாரஞ்

சாலுபொன் தோகையமை பாளிதஞ் சூழ்சரணதாள்சிலம் போலமிட வேநடந் தானநடை

சாதிசந் தானெகின மார்பரந் தோகையெனதானெழுங் கோலவிலை மாதரின் பார்கலவி

தாவுகொண் டேகலிய நோய்கள்கொண் டேபிறவிதானடைந் தாழுமடி யேனிடஞ் சாலும்வினையஞ்சியோடத்

தார்கடம் பாடுகழல் பாதசெந் தாமரைகள்தாழ்பெரும் பாதைவழி யேபடிந் தேவருகு

தாபம்விண் டேயமுத வாரியுண் டேபசிகள்தாபமுந் தீரதுகிர் போனிறங் காழ்கொளுரு

சாரவுஞ் சோதிமுரு காவெனுங் காதல்கொடுதானிருந் தோதஇரு வோரகம் பேறுறுகவிஞ்சைதாராய்

சூலியெந் தாய்கவுரி மோகசங் காரிகுழைதோடுகொண் டாடுசிவ காமசுந் தாரிநல

தூளணைந் தாளிநிரு வாணியங் காளிகலைதோகைசெந் தாமரையின் மாதுநின் றேதுதிசெய்

தூயஅம் பாகழைகொள் தோளிபங் காளக்ருபைதோய்பரன் சேயெனவு மேபெரும் பார்புகழும்விந்தையோனே

சூரசங் காரசுரர் லோகபங் காவறுவர்தோகைமைந் தாகுமர வேள்கடம் பாரதொடை

தோளகண் டாபரம தேசிகந் தாவமரர்தோகைபங் காஎனவே தாகமஞ் சூழ்சுருதி

தோதகம் பாடமலை யேழுதுண் டாயெழுவர்சோரிகொண் டாறுவர வேலெறிந் தேநடனமுங்கொள்வேலா

மாலியன் பாறவொரு ஆடகன் சாகமிகுவாலியும் பாழிமர மோடுகும் பாகனனு

மாழியுங் கோரவலி ராவணன் பாறவிடுமாசுகன் கோலமுகி லோனுகந் தோதிடையர்

மாதுடன் கூடிவிளை யாடுசம் போகதிருமார்பகன் காணமுடி யோனணங் கானமதியொன்றுமானை

மார்புடன் கோடுதன பாரமுஞ் சேரஇடைவார்துவண் டாடமுக மோடுகந் தீரரச

வாயிதங் கோதிமணி நூபுரம் பாடமணவாசைகொண் டாடுமயி லாளிதுங் காகுறவி

மாதுபங்கா மறைகு லாவுசெங் கோடைநகர்வாழவந் தாய்கரிய மாலயன் தேவர்புகழ்தம்பிரானே.

எல்லாப் பாடல்களும் →