பாடல் 573
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தி
- தலம்
- விராலிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதான தான தத்த தனதான தான தத்ததனதான தான தத்ததந்ததான
பாடல் வரிகள்
உருவேற வேஜெ பித்து வொருகோடி யோம சித்தியுடனாக ஆக மத்துகந்துபேணி
உணர்வாசை யாரி டத்து மருவாது வோரெ ழுத்தையொழியாது வூதை விட்டிருந்துநாளும்
தரியாத போத கத்தர் குருவாவ ரோரொ ருத்தர்தருவார்கள் ஞான வித்தைதஞ்சமாமோ
தழலாடி வீதி வட்ட மொளிபோத ஞான சித்திதருமாகி லாகு மத்தைகண்டிலேனே
குருநாடி ராச ரிக்கர் துரியோத னாதி வர்க்ககுடிமாள மாய விட்டுகுந்திபாலர்
குலையாமல் நீதி கட்டி யெழுபாரை யாள விட்டகுறளாக னுறில் நெட்டைகொண்டஆதி
மருகா புராரி சித்தன் மகனே விராலி சித்ரமலைமே லுலாவு சித்தஅங்கைவேலா
மதுரா புரேசர் மெய்க்க அரசாளு மாறன் வெப்புவளைகூனை யேநி மிர்த்ததம்பிரானே.
