பாடல் 544
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்கு ...... மபிராம
- ராகம்
- பீம்பளாஸ்
- தாளம்
- ஆதி - திஸ்ர நடை (12)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தான தத்த தான தத்த தான தத்ததனதான
பாடல் வரிகள்
வேத வெற்பி லேபு னத்தில் மேவி நிற்குமபிராமவேடு வச்சி பாத பத்ம மீது செச்சைமுடிதோய
ஆத ரித்து வேளை புக்க ஆறி ரட்டிபுயநேயஆத ரத்தோ டாத ரிக்க ஆன புத்திபுகல்வாயே
காது முக்ர வீர பத்ர காளி வெட்கமகுடாமாகாச முட்ட வீசி விட்ட காலர் பத்தியிமையோரை
ஓது வித்த நாதர் கற்க வோது வித்தமுநிநாணஓரெ ழுத்தி லாறெ ழுத்தை யோது வித்தபெருமாளே.
