பாடல் 540
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சன
- தலம்
- வள்ளிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதன தந்தன தந்த தந்தனதனதன தந்தன தந்த தந்தனதனதன தந்தன தந்த தந்தனதனதான
பாடல் வரிகள்
வரைவில்பொய் மங்கையர் தங்க ளஞ்சனவிழியையு கந்துமு கந்து கொண்டடிவருடிநி தம்பம ளைந்து தெந்தெனஅளிகாடை
மயில்குயி லன்றிலெ னும்பு ளின்பலகுரல்செய்தி ருந்துபி னுந்தி யென்கிறமடுவில்வி ழுந்துகி டந்து செந்தழல்மெழுகாகி
உருகியு கந்திதழ் தின்று மென்றுகையடியின கங்கள்வ ரைந்து குங்குமஉபய தனங்கள்த தும்ப அன்புடனணையாமஞ்
சுலவிய கொண்டைகு லைந்த லைந்தெழஅமளியில் மின்சொல்ம ருங்கி லங்கிடஉணர்வழி யின்பம றந்து நின்றனைநினைவேனோ
விரவி நெருங்குகு ரங்கி னங்கொடுமொகுமொகெ னுங்கட லுங்க டந்துறுவிசைகொடி லங்கைபு குந்த ருந்தவர்களிகூர
வெயில்நில வும்பரு மிம்ப ரும்படிஜெயஜெய வென்றுவி டுங்கொ டுங்கணைவிறல்நிரு தன்தலை சிந்தி னன்திருமருகோனே
அருகர் கணங்கள்பி ணங்கி டும்படிமதுரையில் வெண்பொடி யும்ம ரந்திடஅரகர சங்கர வென்று வென்றருள்புகழ்வேலா
அறம்வளர் சுந்தரி மைந்த தண்டலைவயல்கள் பொருந்திய சந்த வண்கரையரிவை விலங்கலில் வந்து கந்தருள்பெருமாளே.
