உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 539

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனதந்த தந்தனம் தனதந்த தந்தனம்தனதந்த தந்தனம்தனதான

பாடல் வரிகள்

சிரமங்க மங்கைகண் செவிவஞ்ச நெஞ்சுசெஞ்சலமென்பு திண்பொருந்திடுமாயம்

சிலதுன்ப மின்பமொன் றிறவந்து பின்புசெந்தழலிண்கண் வெந்துசிந்திடஆவி

விரைவின்க ணந்தகன் பொரவந்த தென்றுவெந்துயர்கொண்ட லைந்துலைந்தழியாமுன்

வினையொன்று மின்றிநன் றியலொன்றி நின்பதம்வினவென்று அன்புதந்தருள்வாயே

அரவின்கண் முன்துயின் றருள்கொண்ட லண்டர்கண்டமரஞ்ச மண்டிவந்திடுசூரன்

அகலம் பிளந்தணைந் தகிலம் பரந்திரங்கிடஅன் றுடன்றுகொன்றிடும்வேலா

மரைவெங் கயம்பொருந் திடவண் டினங்குவிந்திசையொன்ற மந்திசந்துடனாடும்

வரையின்கண் வந்துவண் குறமங்கை பங்கயம்வரநின்று கும்பிடும்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →