பாடல் 538
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளை
- தலம்
- வள்ளிமலை
- ராகம்
- அமிர்தவர்ஷணி
- தாளம்
- ஆதி (தேசாதி)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதாத்த தய்ய தனதாத்த தய்யதனதாத்த தய்யதனதான
பாடல் வரிகள்
குடிவாழ்க்கை யன்னை மனையாட்டி பிள்ளைகுயில்போற்ப்ர சன்னமொழியார்கள்
குலம்வாய்த்த நல்ல தனம்வாய்த்த தென்னகுருவார்த்தை தன்னையுணராதே
இடநாட்கள் வெய்ய நமனீட்டி தொய்யஇடர்கூட்ட இன்னல்கொடுபோகி
இடுகாட்டி லென்னை எரியூட்டு முன்னுனிருதாட்கள் தம்மையுணர்வேனோ
வடநாட்டில் வெள்ளி மலைகாத்து புள்ளிமயில்மேற்றி கழ்ந்தகுமரேசா
வடிவாட்டி வள்ளி அடிபோற்றி வள்ளிமலைகாத்த நல்லமணவாளா
அடிநாட்கள் செய்த பிழைநீக்கி யென்னையருள்போற்றும் வண்மைதரும்வாழ்வே
அடிபோற்றி யல்லி முடிசூட்ட வல்லஅடியார்க்கு நல்லபெருமாளே.
