பாடல் 537
அல்லசல டைந்த வில்லடல நங்கன்
- தலம்
- வள்ளிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தய்யதன தந்த தய்யதன தந்ததய்யதன தந்ததனதான
பாடல் வரிகள்
அல்லசல டைந்த வில்லடல நங்கன்அல்லிமல ரம்புதனையேவ
அள்ளியெரி சிந்த பிள்ளைமதி தென்றலையமது கிண்டஅணையூடே
சொல்லுமர விந்த வல்லிதனி நின்றுதொல்லைவினை யென்றுமுனியாதே
துய்யவரி வண்டு செய்யுமது வுண்டுதுள்ளியக டம்புதரவேணும்
கல்லசல மங்கை யெல்லையில் விரிந்தகல்விகரை கண்டபுலவோனே
கள்ளொழுகு கொன்றை வள்ளல்தொழ அன்றுகல்லறை வொன்றையருள்வோனே
வல்லசுர ரஞ்ச நல்லசுரர் விஞ்சவல்லமைதெ ரிந்தமயில்வீரா
வள்ளிபடர் கின்ற வள்ளிமலை சென்றுவள்ளியை மணந்தபெருமாளே.
