பாடல் 533
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்
- தலம்
- வள்ளிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தய்யத்த தான தந்த தய்யத்த தான தந்ததய்யத்த தான தந்ததனதான
பாடல் வரிகள்
முல்லைக்கு மார னங்கை வில்லுக்கு மாதர் தங்கள்பல்லுக்கும் வாடி யின்பமுயலாநீள்
முள்ளுற்ற கால்ம டிந்து கொள்ளிக்குள் மூழ்கி வெந்துபள்ளத்தில் வீழ்வ தன்றியொருஞான
எல்லைக்கு மார ணங்கள் சொல்லித்தொ ழாவ ணங்குமெல்லைக்கும் வாவி நின்றனருள்நாமம்
எள்ளற்கு மால யர்ந்து வுள்ளத்தி லாவ என்றுமுள்ளப்பெ றாரி ணங்கையொழிவேனோ
அல்லைக்க வானை தந்த வல்லிக்கு மார்பி லங்கஅல்லிக்கொள் மார்ப லங்கல்புனைவோனே
அள்ளற்ப டாத கங்கை வெள்ளத்து வாவி தங்கிமெள்ளச்ச ரோரு கங்கள்பயில்நாதா
வல்லைக்கு மார கந்த தில்லைப்பு ராரி மைந்தமல்லுப்பொ ராறி ரண்டுபுயவீரா
வள்ளிக்கு ழாம டர்ந்த வள்ளிக்கல் மீது சென்றுவள்ளிக்கு வேடை கொண்டபெருமாளே.
