பாடல் 534
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பை
- தலம்
- வள்ளிமலை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தய்யத்த தாத்த தய்யத்த தாத்ததய்யத்த தாத்ததனதான
பாடல் வரிகள்
கள்ளக்கு வாற்பை தொள்ளைப்பு லாற்பைதுள்ளிக்க னார்க்கயவுகோப
கள்வைத்த தோற்பை பொள்ளுற்ற காற்பைகொள்ளைத்து ராற்பைபசுபாச
அள்ளற்பை மாற்பை ஞெள்ளற்பை சீப்பைவெள்ளிட்ட சாப்பிசிதமீரல்
அள்ளச்சு வாக்கள் சள்ளிட்டி ழாப்பல்கொள்ளப்ப டாக்கைதவிர்வேனோ
தெள்ளத்தி சேர்ப்ப வெள்ளத்தி மாற்கும்வெள்ளுத்தி மாற்குமருகோனே
சிள்ளிட்ட காட்டி லுள்ளக்கி ரார்க்கொல்புள்ளத்த மார்க்கம்வருவோனே
வள்ளிச்சன் மார்க்கம் விள்ளைக்கு நோக்கவல்லைக்கு ளேற்றுமிளையோனே
வள்ளிக்கு ழாத்து வள்ளிக்கல் காத்தவள்ளிக்கு வாய்த்தபெருமாளே.
