பாடல் 529
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனு
- தலம்
- திருவேங்கடம்
- ராகம்
- சக்ரவாஹம்
- தாளம்
- திஸ்ர த்ருபுடை
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதாந்தன தானன தானனதனதாந்தன தானன தானனதனதாந்தன தானன தானனதனதான
பாடல் வரிகள்
வரிசேர்ந்திடு சேல்கய லோவெனுமுழைவார்ந்திடு வேலையு நீலமும்வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள்வலையாலே
வளர்கோங்கிள மாமுகை யாகியதனவாஞ்சையி லேமுக மாயையில்வளமாந்தளிர் போல்நிற மாகியவடிவாலே
இருள்போன்றிடு வார்குழல் நீழலில்மயல்சேர்ந்திடு பாயலின் மீதுறஇனிதாங்கனி வாயமு தூறல்கள்பருகாமே
எனதாந்தன தானவை போயறமலமாங்கடு மோகவி காரமுமிவைநீங்கிட வேயிரு தாளினையருள்வாயே
கரிவாம்பரி தேர்திரள் சேனையுமுடனாந்துரி யோதன னாதிகள்களமாண்டிட வேயொரு பாரதமதிலேகிக்
கனபாண்டவர் தேர்தனி லேயெழுபரிதூண்டிய சாரதி யாகியகதிரோங்கிய நேமிய னாமரிரகுராமன்
திரைநீண்டிரை வாரியும் வாலியும்நெடிதோங்கும ராமர மேழொடுதெசமாஞ்சிர ராவண னார்முடிபொடியாகச்
சிலைவாங்கிய நாரண னார்மருமகனாங்குக னேபொழில் சூழ்தருதிருவேங்கட மாமலை மேவியபெருமாளே.
