பாடல் 528
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனில
- தலம்
- திருவேங்கடம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தாந்தன தானதன தாந்தன தானதனதாந்தன தானதனதனதான
பாடல் வரிகள்
சாந்தமில் மோகவெரி காந்திய வாவனிலமூண்டவி யாதசமயவிரோத
சாங்கலை வாரிதியை நீந்தவொ ணாதுலகர்தாந்துணை யாவரெனமடவார்மேல்
ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடுதோயந்துரு காவறிவுதடுமாறி
ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்யான்தனி போய்விடுவதியல்போதான்
காந்தளி னானகர மான்தரு கானமயில்காந்தவி சாகசரவணவேளே
காண்டகு தேவர்பதி யாண்டவ னேசுருதியாண்டகை யேயிபமின்மணவாளா
வேந்தகு மாரகுக சேந்தம யூரவடவேங்கட மாமலையிலுறைவோனே
வேண்டிய போதடியர் வேண்டிய போகமதுவேண்டவெ றாதுதவுபெருமாளே.
