பாடல் 515
பரமகுரு நாத கருணையுப தேச
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனதனன தான தனதனன தானதனதனன தானத்தனதானா
பாடல் வரிகள்
பரமகுரு நாத கருணையுப தேசபதவிதரு ஞானப்பெருமாள்காண்
பகலிரவி லாத ஒளிவெளியில் மேன்மைபகருமதி காரப்பெருமாள்காண்
திருவளரு நீதி தினமனொக ராதிசெகபதியை யாளப்பெருமாள்காண்
செகதலமும் வானு மருவையவை பூததெரிசனைசி வாயப்பெருமாள்காண்
ஒருபொருள தாகி அருவிடையை யூருமுமைதன்மண வாளப்பெருமாள்காண்
உகமுடிவு கால மிறுதிகளி லாதஉறுதியநு பூதிப்பெருமாள்காண்
கருவுதனி லுறு மருவினைகள் மாயகலவிபுகு தாமெய்ப்பெருமாள்காண்
கனகசபை மேவி அனவரத மாடுகடவுள்செக சோதிப்பெருமாளே.
