பாடல் 514
முத்த மோகன தத்தையி னார்குர
- தலம்
- சிதம்பரம்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தத்த தானன தத்தன தானனதத்த தானன தத்தன தானனதத்த தானன தத்தன தானனதனதான
பாடல் வரிகள்
முத்த மோகன தத்தையி னார்குரலொத்த வாயித சர்க்கரை யார்நகைமுத்து வாரணி பொற்குவ டார்முலைவிலைமாதர்
மொக்கை போகசெ குத்திடு வார்பொருள்பற்றி வேறும ழைத்திடு வார்சிலர்முச்ச லீலிகை சொக்கிடு வாரிடர்கலிசூழச்
சித்தி லாடஅ ழைத்திடு வார்கவடுற்ற மாதர்வ லைப்புகு நாயெனைசித்தி ஞானம்வெ ளிப்பட வேசுடர்மடமீதே
சித்தெ லாமொரு மித்துன தாறினம்வைத்து நாயென ருட்பெற வேபொருள்செப்பி யாறும கப்பரி வோடுணர்வருள்வாயே
தத்த னானத னத்தன தானெனுடுக்கை பேரிமு ழக்கிட வேகடல்சத்த தீவுத யித்தியர் மாளிடவிடும்வேலா
சத்தி லோகப ரப்பர மேசுரநிர்த்த மாடுக ழற்கரு ணாகரதற்ப ராபர நித்தனொர் பாலுறையுமைபாலா
துத்தி மார்முலை முத்தணி மோகனபொற்ப்ர காசமு ளக்குற மான்மகள்துப்பு வாயிதழ் வைத்தணை சோதிபொன்மணிமார்பா
சுட்டி நீலஇ ரத்தின மாமயிலுற்று மேவிய ருட்புலி யூர்வளர்சுத்த னேசசி பெற்றபெ ணாயகிபெருமாளே.
