பாடல் 513
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தனனா தனத்ததன தனனா தனத்ததனதனனா தனத்ததனதனதானா
பாடல் வரிகள்
மனமே உனக்குறுதி புகல்வே னெனக்கருகில்வருவா யுரைத்தமொழிதவறாதே
மயில்வாக னக்கடவுள் அடியார் தமக்கரசுமனமாயை யற்றசுகமதிபாலன்
நினைவே துனக்கமரர் சிவலோக மிட்டுமலநிலைவே ரறுக்கவலபிரகாசன்
நிதிகா நமக்குறுதி அவரே பரப்பிரமநிழலாளி யைத்தொழுதுவருவாயே
இனமோ தொருத்திருபி நலமேர் மறைக்கரியஇளையோ ளொரொப்புமிலிநிருவாணி
எனையீ ணெடுத்தபுகழ் கலியாணி பக்கமுறையிதழ்வேணி யப்பனுடைகுருநாதா
முனவோர் துதித்து மலர் மழைபோ லிறைத்துவரமுதுசூ ரரைத்தலை கொள்முருகோனே
மொழிபாகு முத்துநகை மயிலாள் தனக்குருகுமுருகா தமிழ்ப்புலியுர்பெருமாளே.
