உள்ளடக்கத்திற்குச் செல்
73, தெப்பக்குளத் தெரு, திருச்செந்தூர் – 628 21589389 32989
English

← திருப்புகழ்

பாடல் 49

குழைக்குஞ்சந் தனச்செங்குங்

சந்தம்

பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல

தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனத்தந்தம் தனத்தந்தம்தனதானா

பாடல் வரிகள்

குழைக்குஞ்சந் தனச்செங்குங்குமத்தின்சந் தநற்குன்றங்குலுக்கும்பைங் கொடிக்கென்றிங்கியலாலே

குழைக்குங்குண் குமிழ்க்குஞ்சென்றுரைக்குஞ்செங் கயற்கண்கொண்டழைக்கும்பண் தழைக்குஞ்சிங்கியராலே

உழைக்குஞ்செங் கடத்துன்பன்சுகப்பண்டஞ் சுகித்துண்டுண்டுடற்பிண்டம் பருத்தின்றிங்குழலாதே

உதிக்குஞ்செங் கதிர்ச்சிந்தும்ப்ரபைக்கொன்றுஞ் சிவக்குந்தண்டுயர்க்குங்கிண் கிணிச்செம்பஞ்சடிசேராய்

தழைக்குங்கொன் றையைச்செம்பொன்சடைக்கண்டங் கியைத்தங்குந்தரத்தஞ்செம் புயத்தொன்றும்பெருமானார்

தனிப்பங்கின் புறத்தின்செம்பரத்தின்பங் கயத்தின்சஞ்சரிக்குஞ்சங் கரிக்கென்றும்பெருவாழ்வே

கழைக்குங்குஞ் சரக்கொம்புங்கலைக்கொம்புங் கதித்தென்றுங்கயற்கண்பண் பளிக்குந்திண்புயவேளே

கறுக்குங்கொண் டலிற்பொங்குங்கடற்சங்கங் கொழிக்குஞ்செந்திலிற்கொண்டன் பினிற்றங்கும்பெருமாளே.

எல்லாப் பாடல்களும் →