பாடல் 48
குடர்நிண மென்பு சலமல மண்டு
- தலம்
- திருச்செந்தூர்
- ராகம்
- குந்தல வராளி
- தாளம்
- அங்கதாளம் (14 1/2)
சந்தம்
பாடுவோர் பின்பற்றும் தாளக்கட்டு — பாடல் வரிகள் அல்ல
தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகிட-1 1/2,தகதிமி-2, தகிட-1 1/2, தகதிமி-2, தகதிமி-2தனதன தந்த தனதன தந்ததனதன தந்ததானாந்தனனா
பாடல் வரிகள்
குடர்நிண மென்பு சலமல மண்டுகுருதிந ரம்புசீயூன் பொதிதோல்
குலவு குரம்பை முருடு சுமந்துகுனகிம கிழ்ந்துநாயேன் தளரா
அடர்மத னம்பை யனையக ருங்கணரிவையர் தங்கள்தோடோ ய்ந் தயரா
அறிவழி கின்ற குணமற வுன்றன்அடியிணை தந்துநீயாண் டருள்வாய்
தடவியல் செந்தில் இறையவ நண்புதருகுற மங்கைவாழ்வாம் புயனே
சரவண கந்த முருகக டம்பதனிமயில் கொண்டுபார்சூழ்ந் தவனே
சுடர்படர் குன்று தொளைபட அண்டர்தொழவொரு செங்கைவேல்வாங் கியவா
துரிதப தங்க இரதப்ர சண்டசொரிகடல் நின்றசூராந் தகனே.
